கொரோனா பாதித்து ஜப்பான் நகைச்சுவை நடிகர் மரணம்... ஹாலிவுட்டை மிரட்டும் வைரஸ்...

கொரேனா பாதிப்பில் நட்சத்திரங்கள் என்ற பார்த்தால் ஹாலிவுட் நடிகர்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். முதலில் டாம் ஹாங்க்ஸ் அவரது மனைவி ரீட்டா வில்சன் ஆகியோருக்கு கொரோனா தொற்று என்று தகவல் வந்தது. சிகிச்சை பிறகு குணம் அடைந்தனர். அடுத்து ஜேம்ஸ் பாண்ட் பட நடிகை ஓல்கா குரிலென்கோ பாதிக்கப்பட்டார். இவர், குவாண்டம் ஆப் சோலஸ் படத்தில் நடித்துள்ளார். சில தினங்களுக்கு முன் ஹாலிவுட் நடிகர் மார்க் ப்ளம் கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்தார்.

தற்போது ஜப்பான் படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வந்த கென் ஷிமுரா, கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளார். திரைப் படம், டிவி நிகழ்ச்சிகளில் நடித்து வந்தவருக்கு மார்ச் இறுதி வாரத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. டோக்கியோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

More News >>