கலாய்கும் நெட்டிசன்களுக்கான தேசிய கீதம் - வைரலாகும் வீடியோ!

‘மீம்ஸ் கிரியேட்டர்களை’ கவுரவப்படுத்தும் வகையில் வைசாக் என்னும் ஒலி வடிவமைப்பாளர் ’மீம் கிரியேட்டர் ஆந்தம்’ என்ற பெயரில் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களை கலக்கி வருகிறது.

நாட்டில் நடக்கும் அத்தனை சம்பவங்களையும் கேலி செய்ய ஒரு தனி கூட்டமே சமூக வலைத்தளங்களில் உலவி வருகின்றனர். இவர்களின் மீம்ஸ்களை தேடிப் பார்ப்பதற்கென்றும் ஒரு பெருங்கூட்டமே உள்ளது.

இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த வைஷாக் என்னும் இளைஞர் நண்பர்களோட சேர்ந்து ட்ரெண்டி தமிழன் என்கின்ற பெயரில் ஒரு இசைக்குழுவை உருவாக்கி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக மீம்ஸ் போட்டு கலாய்ப்பவர்களை கவுரவப்படுத்தும் வகையில், ’மீம் கிரியேட்டர் ஆந்தம்’ என்ற பெயரில் வீடியோ பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது சமூக வலைத்தங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

வீடியோவை கீழே பாருங்கள்:

More News >>