சிறந்த சேவைக்கான விருதை தட்டிச் சென்றது ஜியோ..!
2018ம் ஆண்டுக்கான வாடிக்கையாளர்களுக்கான சிறந்த சேவை விருதை ரிலையன்ஸ் ஜியோ தட்டிச் சென்றது.
உலக மொபைல் காங்கிரஸ் 2018 நிகழ்ச்சி, பார்சிலோனாவில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் முன்னணி நிறுவனங்கள் கலந்துக் கொண்டு தங்களின் புதுவகை மொபைல் போன்களை அறிமுகம் செய்தது. இதேபோல், எல்ஜி, விவோ உள்ளிட்ட நிறுவனங்கள் மற்ற மொபைல் நிறுவனங்களுக்கு போட்டியாக அட்வான்ஸ் தொழில்நுட்பம் கொண்ட மொபைல் போன்களை அறிமுகம் செய்தது.
இந்நிகழ்ச்சியில், சிறந்த மொபைல் ஆபரேட்டர் சேவை பிரிவில் வாடிக்கையாளர்களுக்கான சிறந்த சேவை விருதை ரிலையன்ஸ் ஜியோவிற்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.