சந்தானம் மீண்டும் டிவிக்கு வருகிறார்.. கிரிக்கெட் வீரர் வரவேற்பு..

விஜய் டிவியில் லொள்ளு சபாவில் பிரபலமானவர் சந்தானம். அவரை நடிகராக்கினார் சிம்பு. காமெடி வேடத்தில் தனக்கென ஒரு ரூட் போட்டுக் குறுகிய காலத்தில் எல்லா முன்னணி ஹீரோக்களுடனும் நடித்தார். அதே வேகத்தில் ஹீரோவாகவும் என்ட்ரி கொடுத்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தைத் தக்க வைத்திருக்கிறார்.

திடீரென்று சந்தானம் திரும்பவும் டிவியில் வரவேண்டும் என்று கிரிக்கெட் வீரர் அஸ்வின் வழிமொழிந்திருக்கிறார்.ரசிகர் ஒருவர், கொரோனா ஊரடங்கு வீட்டில் போரடிக்கிறது. சந்தானத்தின் லொள்ளு சபா ஷோவை மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்ப வேண்டும் எனக் கேட்க அதை கிரிக்கெட் வீரர் அஸ்வின் வழிமொழிந்திருக்கிறார்.

More News >>