மதயானைக் கூட்டம் பட ஹீரோவுக்கு டும் டும் டும்.. !
மதயானைக் கூட்டம் படம் மூலம் அறிமுகமான நடிகர் கதிருக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற உள்ளது.
மதயானைக் கூட்டம் படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் கதிர். இவர் தொடர்ந்து, கிருமி, என்னோடு விளையாடு, விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இருப்பினும், தற்போது சத்ரு, பரியேறும் பெருமாள், சிகை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், கதிருக்கும் ஈரோட்டைச் சேர்ந்த தொழிலதிபரின் மகள் சஞ்சனாவுக்கும் ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று திருமணம் நடத்தப்படுகிறது.
இவர்களின் திருமணம், ஈரோட்டில் உள்ள வேலாயுதசாமி கேயிலிலும், ஸ்ரீதங்கம் என்ற மஹாலில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதைதவிர, சென்னையில் தனியாக வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.