திரைப்படத் துறையினருக்கு மீண்டும் வேண்டுகோள்.. 25ஆயிரம் தொழிலாளர்களைக் காக்க நிதி தாரீர்..

தென்னிந்தியத் திரைப்பட சம்மேளன தலைவர் ஆர். கே.செல்வமணி மற்றும் நிர்வாகிகள் இன்று மாலை விடுத்துள்ள வேண்டுகோளில் கூறியிருப்பதாவது :

எங்கள் வேண்டுகோளை ஏற்று இதுவரை நல்ல இதயம் கொண்ட ரஜினி காந்த் 50 லட்சம், கமல்ஹாசன் 10 லட்சம், சிவ குமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் 10 லட்சம், தனுஷ் 15 லட்சம், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் தலா 10 லட்சம், இயக்குனர் சங்கர் 10 லட்சம், தயாரிப்பாளர் லலித்குமார் 10 லட்சம் என மொத்தமாக ஒரு கோடியே 59 லட்சத்து 64 ஆயிரம் வங்கிக் கணக்கிலும் மற்றும் தயாரிப்பாளர் தாணு 250 அரிசி மூட்டை, சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் 275 அரிசி மூட்டைகள், கே ஜே ஆர் ராஜேஷ் ஆயிரம் அரிசி மூட்டைகள், பார்த்திபன் 250 அரிசி மூட்டைகள், அருள்நிதி 250 அரிசி மூட்டைகள் என மொத்தமாக 1983 நிவாரணம் வழங்கி உள்ளனர்.25 ஆயிரம் உறுப்பினர்கள் கொண்ட நமது சம்மேளனத்திற்கு இந்த நிவாரணம் ஒரு நபருக்கு 25 அரிசி மூட்டை ரூபாய் 500 உதவி பணம் கொடுப்பதற்கு போதுமானதாக இல்லை.

நமது தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தைப்போன்றே 25 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ள இந்தி திரைப்பட உலகில் சல்மான்கான் என்ற ஒரு நடிகர் ஒவ்வொரு தொழிலாளிக்கும் 5 ரூபாய் ஆயிரம் உதவி பணம் என்ற அளவில் பதின்மூன்று கோடி ரூபாய் நேரடியாகத் தொழிலாளர்களுக்கு வங்கிக் கணக்கில் செலுத்தி இருக்கிறார். பிரபாஸ் நாலு கோடி கொடுத்தார், பவன் கல்யாண் 2 கோடி கொடுத்தார், நாகார்ஜுன் ஒரு கோடி கொடுத்தார் என்ற செய்திகளும் நமது திரைப்பட தொழிலாளர்களின் செவிக்கு வந்து சேருகின்றபோது அவர்களுக்கு ஒரு புது நம்பிக்கையை கொடுக்கின்றதுதமிழ்த் திரைப்படத் துறையில் நல்ல நிலைமையில் இருக்கின்ற நடிகர், நடிகையர் சகோதர சகோதரிகளுக்கு, இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு, தொழில்நுட்ப கலைஞர்களுக்கு, அனைத்து தொலைக் காட்சி நிறுவனத்திற்கும் மற்றும் அதன் உரிமையாளர்களுக்கும் மற்றும் திரைப்படத் துறையின் மற்ற அனைத்து பிரிவுகளைச் சேர்ந்த நல்ல உள்ளம் கொண்ட மனித நேய அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். இந்த இக்கட்டான முன்னுதாரணம் இல்லாத சிரமமான நிலையில் நமது திரைப்பட தொழிலாளர்கள் காப்பாற்ற நிதியளிப்பீர் என மீண்டும் கை கூப்பிக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி மற்றும் நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர்.

More News >>