சீனாக்காரர்களை லெப்ட் ரைட் வாங்கிய ஹீரோயின்.. கொஞ்சம் கூட அறிவில்லையாடா...

கொரோனா வைரஸை பரப்பியது சீனாதான் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டி உள்ளன. சீனாவோ கடல் மீனிலிருந்து கொரோனா பரவியது, அமெரிக்க உளவு படைத்தான் பரப்பியது என்று சப்பைக்கட்டுக் கட்டி வருகிறது. கடல் மீனிலிருந்து கொரோனா பரவியது என்று முதலில் காரணம் சொன்ன சீனா அங்குள்ள அசைவ மார்க்கெட்டை மூடியது.

இந்நிலையில் மீண்டும் அந்த மார்க்கெட் திறந்து விட்டதாக நெட்டில் தகவல் வந்தது. அதைக்கண்டு கொதிப்படைந்தார் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா தாஸ். அவர் சீனர்களை வெளுத்து வாங்கியிருக்கிறார். வவ்வால், எலி, பூனை முயல், நாய், தேள்.. அட மா மானங்கெட்டவங்களா எதைத்தான் விட்டுவைத்தீர்கள் இப்போத்தானே வைரஸ் தாக்குதலுக் குள்ளாகி உலகத்துக்கே பரப்பிவிட்டீர்கள். நீங்கள் திருந்தவே மாட்டீங்களா எனத் தனது டிவிட்டர் பக்கத்தில் லெப்ட் ரைட் வங்கியிருக்கிறார்.

ஷ்ரத்தா தாஸ் தெலுங்கில் சித்து பிரம் சிகாகுளம், அபினேட்டா, ஆர்யா 2போன்ற படங்களிலும் இந்தியில் ஜித், லாகூர், சனம் தேரி கசம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

More News >>