விஷ்ணு விஷாலுக்குச் சீக்கிரமே கல்யாணம்.. பேட்மிண்டன் வீராங்கனையை மணக்கிறார்..
வெண்ணிலா கபடி குழு, இன்று நேற்று நாளை, ராட்ஷசன் போன்ற பல படங்களில் நடித்திருக்கும் விஷ்ணு விஷால் கருத்து வேறுபாடு காரணமாக மனையிடமிருந்து விவாகரத்து பெற்றார்.பின்னர் பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவுடன் நட்பு ஏற்பட்டு காதலாக மலர்ந்தது. இருவரும் டேட்டிங் செய்து வந்தனர்.
இதுவரை தங்கள் காதலை உறுதி செய்யாமலிருந்த இருவரும் தற்போது உறுதி செய்துள்ளனர். இருவரும் விரைவில் திருமணம் செய்யவிருப்பதாக தெரிவித்துள்ளனர்.