என்னது கீர்த்திக்குக் கல்யாணமா? ரசிகர்கள் அதிர்ச்சி..

விஜய், சூர்யா, விஷால் என கிடுகிடுவென டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்ட கீர்த்தி சுரேஷ் தற்போது வேகமில்லாமல் இருக்கிறார். அதற்கு காரணம் அவரது பாலிவுட் ஆசைதான் என்பது வெளிவராத ரகசியம்.

இந்தி படமொன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகி மும்பை சென்றவர் யாருடைய பேச்சையோ கேட்டு தனது கொழுக் மொழுக் உடற்கட்டை ஒல்லிப்பிச்சான் ஆனார். இதுவே அவருக்கு மைனஸ் ஆகிவிட்டது. குறிப்பிட்ட இந்தி படத்திலிருந்து அவரை படத்தரப்பு நீக்கியது. சற்று உடல் குண்டாக இருந்தால்தான் இந்த கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருக்கும் தற்போதுள்ள ஒல்லியான தோற்றம் பொருந்தாது என்று காரணம் கூறியது. இந்தி பட ஆசையில் தேடி வந்த தமிழ்ப் படங்களை அவர் ஏற்கவில்லை. அந்த வாய்ப்புகள் வேறு நடிகைகளுக்குச் சென்றது. தற்போது ரஜினி நடிக்கும் அண்ணாத்தே படத்தில் அவரது தங்கையாக நடிக்கிறார்.

இதற்கிடையில் கீர்த்தி சுரேஷுக்கு அவரது குடும்பத்தினர் திருமணம் செய்ய மாப்பிள்ளை பார்த்து வருகின்றனர் என்று தகவல் வருகிறது. இது அவரது ரசிகர்களைக் கவலையில் ஆழ்த்தி உள்ளது.

More News >>