உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தைத் தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 15,964 ஆக உயர்ந்துள்ளது. இது வரை 53,218 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் உகான் நகரில் தோன்றிய ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவியுள்ளது. இன்று(ஏப்.3) காலை நிலவரப்படி, 10 லட்சத்து 15,964 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இது வரை 53,218 பேர் உயிரிழந்துள்ளனர். 2 லட்சத்து 12,994 பேர் நோயிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர். தற்போது 37,654 பேருக்கு நோய்ப் பாதிப்பு அதிகமாகி, கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

அமெரிக்காவில் 2 லட்சத்து 45,193 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அந்நாட்டில் 6088 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் ஒரு லட்சத்து 15,242 பேர் பாதித்துள்ளனர். 13,915 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் 81,620 பேருக்கு நோய் பாதித்துள்ளது. 3,322 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் ஒரு லட்சத்து 12,065 பேருக்கு நோய் பாதிக்கப்பட்டது. 10,348 பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்சில் 59,105 பேருக்கு நோய் பாதித்துள்ளது. 5387 பேர் உயிரிழந்துள்ளனர்.

More News >>