மிகவும் தொந்தரவாக உள்ளது.. ஸ்டோர்களில் இருந்து சராஹா மெசேஜ் ஆப் நீக்கம்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகமான சராஹா ஆப் எளிதாக பயன்படுத்தக்கூடிய வகையில் இல்லை, பாதுகாப்பு இல்லை உள்ளிட்ட காரணத்தால் கூகுள் மற்றும் ஆப்பில் ஸ்டோர்களில் இருந்து சராஹா ஆப்பை நீக்கப்பட்டுள்ளது.

சராஹா ஆப் என்பது முகம் தெரியாதவர்களிடம் இருந்து நாம் மெசேஜ் பெற முடியும். இந்த ஆப் அறிமுகமாக ஆரம்பத்தில் வைரலாக பரவியது.

மற்றவர்கள் தரும் கருத்துக்களை கொண்டு ஒருவர் தன்னை மாற்றிக் கொள்ளலாம் என்பது தான் இந்த ஆப்பின் நோக்கம் என ஆப்பை உருவாக்கியவர்கள் கூறி உள்ளனர். இந்த ஆப்பில், ஒருவரது புரொபைலை பார்த்து கூட அவர்களுக்கு மெசேஜ் செய்ய முடியும். ஆனால், மெசேஜ் பெற்றவர்கள் தங்களுக்கு யார் மெசேஜ் அனுப்பியது என்று பார்க்க முடியாது.

இந்த ஆப் இளைஞர்கள் மத்தியில் பரவலாக பரவினாலும், இதன் தனி நபர் பாதுகாப்பு அம்சங்கள் பற்றி கேள்விக் குறியாக இருந்தது. மேலும், இது ப்ரண்ட்லி யூசராக இல்லை. மிகவும் தொந்தரவாக இருக்கிறது என்றும் பலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதுதொடர்பாக, ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். இதற்கு, 4 லட்சத்து 70 ஆயிரம் பேர் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், இந்த புகாரை ஏற்றுக் கொண்ட ஆப் நிறுவனம், கூகுள், ஆப்பிள் ஸ்டோர்களில் இருந்து சராஹா ஆப்பை நீக்கினர்.

More News >>