மடாதிபதி விஜயேந்திரர் மீது வழக்குப் பதிவா? - நீதிமன்றம் உத்தரவு
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து நிற்காத விஜயேந்திரர் மீது முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் கடந்த மாதத்தில் நடைபெற்ற தமிழ்- சமஸ்கிருதம் அகராதி நூல் வெளியீட்டு விழாவில் காஞ்சி சங்கர மடத்தின் இளைய சங்கராச்சாரியார் விஜயேந்திரர் கலந்து கொண்டார்.
தேசிய கீதப் பாடலுக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தியவர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இசைக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
எனவே, தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்த விஜேயேந்திரர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி தந்தை பெரியார் திராவிட கழகத்தின் துணைத் தலைவர் எஸ்.துரைசாமி சென்னை உயர்நீதிமன்றத் தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை வெள்ளியன்று (மார்ச் 2) விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், இதுதொடர்பாக விசாரணை நடத்தி முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.