அமெரிக்காவில் கொரோனா பலி 7392 ஆக அதிகரிப்பு.. 2.8 லட்சம் பேருக்குப் பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 98,456 ஆக உயர்ந்துள்ளது. இது வரை 59,162 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் மட்டும் 7,392 பேர் கெரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொடூர ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவியுள்ளது. இன்று(ஏப்.4) காலை நிலவரப்படி, 10 லட்சத்து 98,456 பேருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டிருக்கிறது. இது வரை 59,162 பேர் உயிரிழந்துள்ளனர். 2 லட்சத்து 28,923 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 39,391 பேருக்கு அதிகமான பாதிப்பு ஏற்பட்டு, கவலைக்கிடமாக உள்ளனர்.உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிகபட்சமாக 2 லட்சத்து 77,161 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அங்கு நேற்று வரை 7,392 பேர் உயிரிழந்துள்ளனர். நியூயார்க் மாகாணத்தில்தான் அதிகபட்சமாக ஒரு லட்சத்து 3476 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது. அந்த மாகாணத்தில் மட்டும் 3218 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். நியூஜெர்சியில் 29,895 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அங்கு 646 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

இத்தாலியில் ஒரு லட்சத்து 19,827 பேர் பாதித்துள்ளனர். 14,681 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் 81,639 பேருக்கு நோய் பாதித்துள்ளது. 3,326 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் ஒரு லட்சத்து 19,199 பேருக்கு நோய் பாதிக்கப்பட்டது. 11,198 பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்சில் 64,338 பேருக்கு நோய் பாதித்துள்ளது. 6507 பேர் உயிரிழந்துள்ளனர்.

More News >>