டாப்ஸியை நக்கலடித்த கங்கனா சகோதரி,, பி கிரெட் மிமிகிரை செய்கிறார்..

நடிகை டாப்ஸிக்கும் நடிகை கங்கனா ரனாவத் சகோதரி ரங்கோலிக்கும் எப்போதுமே ஆகாது. டாப்ஸியை மட்டம் தட்டுவதிலே ரங்கோலி குறியாக இருப்பார். மிஷன் மங்கள் என்ற படத்தில் டாப்ஸி நடித்தபோதிலிருந்தே அவரை கலாய்த்து வருகிறார் ரங்கோலி . ஆனால் டாப்ஸி நேரடியாகப் பதில் சொல்லாமல் மறைமுகமாக அவருக்குப் பதில் அளிக்கிறார்.

கங்கனாவும், ரங்கோலியும் பாஜ கட்சியின் ஆதரவாளர்கள். திரையுலகில் யாராவது மோடியைக் குறை சொன்னால் உடனே அதற்கு ரங்கோலி பதிலடி தருவது வழக்கம். நேற்று மோடி கொரொனா வைரஸ் பற்றிய உரையாற்றியபோது மக்கள் எல்லோரும் ஏப்ரல் 5ம் தேதி இரவு 9 மணிக்கு மின்விளக்குகளை அணைத்துவிட்டு அகல் விளக்கு ஏற்றும்படி கூறினார். அதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன . டாப்ஸி மறைமுகமாகத் தனது கருத்தைத் தெரிவித்தார். அதில், அடுத்து டாஸ்க் (போட்டி)ஆரம்பித்துவிட்டது என்று கூறிவிட்டு ஹா ஹா ஹா என சிரிப்பது போல் மெசேஜ் பதிவிட்டிருந்தார்.

டாப்ஸியின் இந்த மெஸேஜை பார்த்ததும் ரங்கோலிக்குக் கோபம் வந்துவிட்டது. அவர் டாப்ஸியை பி கிரேட் மிமிகிரி ஆர்ட்டிஸ்ட் என்றதுடன் டிரம்ப்பை விட அவரை (டாப்ஸி) எப்படி கப்சிப் ஆக்குவது என்பது மோடிக்குத் தெரியும் எனக் காட்டமாகக் கூறினார். ஆனால் ரங்கோலியின் இந்த காட்டம் அவருக்கே எதிர்வினையைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது. கங்கனா எப்போதெல்லாம் வாய் திறக்காமல் இருக்கிறாரோ அப்போதெல்லாம் ரங்கோலி வில்லங்கமாகப் பேச ஆரம்பித்து விடுகிறார் என்றார்.

More News >>