கொரோனா தடுப்பு பணி.. எல்லா தலைவர்களிடமும் தொடர்பு கொண்ட மோடி..

கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் ஊரடங்கு நிலவரங்கள் தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தி உள்பட பல்வேறு கட்சித் தலைவர்களிடம் பிரதமர் மோடி தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், இப்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்தியாவில் இது வரை 3,374 பேருக்குப் பரவியிருக்கிறது. 77 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த நோய் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி தனது இல்லத்தில் இருந்தபடியே அமைச்சர்கள், மத்திய அரசு உயர் அதிகாரிகள், டாக்டர்கள் என எல்லோரிடமும் வீடியோ கான்பரன்சில் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார். மேலும், வரும் 8ம் தேதியன்று நாடாளுமன்றக் கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.இதற்கிடையே, பிரதமர் மோடி இன்று காலையில் பல தலைவர்களுடன் தொலைப்பேசியில் பேசினார். முன்னாள் ஜனாதிபதிகள் பிரணாப் முகர்ஜி, பிரதிபா பாடீல், முன்னாள் பிரதமர்கள் மன்மோகன்சிங், தேவகவுடா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திரிணாமுல் தலைவர் மம்தா பானர்ஜி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சமாஜ்வாடி தலைவர் முலாயம்சிங், அகிலேஷ்யாதவ் உள்படப் பல தலைவர்களிடம் பிரதமர் மோடி பேசினார்.

அப்போது அந்த தலைவர்களின் உடல்நலம் மற்றும் குடும்பம் பற்றி விசாரித்தார். மேலும், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து விளக்கம் கூறி, ஆலோசனைகளையும் கேட்டறிந்தார்.

More News >>