அஞ்சலி வீட்டில் புது வரவு.. முத்த மழையில் நனைக்கிறார்..

தமிழ் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் நடிகை அஞ்சலி. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் தனது வீட்டுக்கு வந்த புது உறவுக்காரருக்கு முத்த மழை தந்து மகிழ்ந்தார். யாருப்பா அந்த அதிர்ஷ்டக்கார வரவு என்று பார்த்தபோதுதான் அஞ்சலி வாங்கியிருக்கும் செல்ல நாய்க்குட்டி என்பது தெரிந்தது.

படப்பிடிப்பு இல்லாத நிலையில் வீட்டில் செல்ல நாய்க்குட்டியுடன் விளையாடி பொழுதைக் கழிக்கிறார். அத்துடன் எல்லோரும் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள் என்று அட்வைசும் தந்திருக்கிறார். அஞ்சலியின் தோற்றத்திலும் வித்தியாசம்.செம ஒல்லியாகி பாலிவுட் நடிகை போல் இருக்கிறார்.

More News >>