பிரிட்டன் பிரதமர் ஜான்சன் மருத்துவமனையில் அனுமதி

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு காய்ச்சல் குறையாததால், தனிமையிலிருந்த அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சீனாவில் தோன்றி உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ், இங்கிலாந்தில் 48 ஆயிரம் பேருக்குப் பரவியுள்ளது. 4934 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இங்கிலாந்து இளவரசர் சார்லசுக்கு சோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இளவரசர் சார்லசை தொடர்ந்து அந்நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் கொரோனா வைரஸ் பாதித்திருப்பது உறுதியானது. கடந்த மார்ச் 27ம் தேதி அவருக்கு கொரோனா அறிகுறி தென்படவே, டாக்டர்களின் அறிவுரைப்படி அவர் வீட்டிலேயே தனிமையிலிருந்தார். இந்நிலையில், தற்போது இத்தனை நாட்களாகியும் போரிஸ் ஜான்சனுக்கு காய்ச்சல் விடவில்லை. இதையடுத்து, அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் குணமாகும் வரை அவர் மருத்துவமனையில் இருப்பார் என்று பிரிட்டன் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

More News >>