ஸ்பெஷல் தந்தூரி சிக்கன் பிரியாணி ரெசிபி..
நாளைக்கு சண்டே.. ஸ்பெஷலா ஏதாவது சமைத்து குடும்ப உறுப்பினர்களை சந்தோஷப்படுத்த வேண்டாமா.. இதோ உங்களுக்காக தந்தூரி சிக்கன் பிரியாணி ரெசிபி..
சமைக்க தேவையானவை
சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி கஸூரி மேத்தி - ஒரு தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு பிரியாணி செய்ய : அரிசி - அரை கிலோ சிக்கன் லெக்பீஸ் - 4 இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி அன்னாசிப்பூ - தலா2 கறிவேப்பிலை - சிறிது சிக்கனுடன் சேர்த்து ஊற வைக்க : பச்சைமிளகாய் - 2 தயிர் - ஒரு கப் லவங்கம் - 4 பூண்டு - ஒன்று எலுமிச்சை – பாதி மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி இஞ்சி - ஒரு துண்டு கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி - ஒரு கைப்பிடி வெங்காயம் - 3 மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி தக்காளி - 3 கரம் மசாலா - அரை தேக்கரண்டி புதினா, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி தாளிக்க : பட்டை, பிரிஞ்சு இலை, இலவங்கம், ஏலக்காய்.
உணவு செய்முறை
முதலில் சிக்கனுடன் சேர்த்து ஊற வைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு அரைத்து சுத்தம் செய்த சிக்கனில் சேர்த்து 3 மணிநேரம் ஊற வைக்கவும்.
ஊற வைத்த சிக்கனை சிறிது எண்ணெய் விட்டு முக்கால் பாகம் வேகும் வரை பொரிக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கி, தக்காளி சேர்த்து மேலும் வதக்கவும். அதில் இஞ்சி பூண்டு விழுது, தூள் வகைகள், உப்பு சேர்த்து வதக்கி பொரித்த சிக்கனை சேர்க்கவும்.
அதனுடன் ஒரு கப் அரிசிக்கு 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதித்தது ஊற வைத்த அரிசியை சேர்த்து கலந்து, எலுமிச்சை சாறு ஊற்றி வேக விடவும்.
விருப்பமெனில் கலர் சேர்த்து 10 முதல் 15 நிமிடம் தம்மில் போடவும். அரைமணி நேரம் கழித்து திறக்க. சுவையான தந்தூரி சிக்கன் பிரியாணி தயார்.