மிரட்டல் நடிகை ஆண் நண்பர்களுடன் பார்ட்டி.. குடித்ததால் கார் விபத்தா?

வினய் சந்தானம் பிரபு நடித்த மிரட்டல் தமிழ்ப் படத்தில் நடித்தவர் ஷர்மிளா மன்றே. இவர் நேற்று முன்தினம் பெங்களூரில் ஆண் நபருடன் அதிகாலையில் காரில் வேகமாகச் சென்ற போது விபத்தில் சிக்கினார். இதில் காயம் அடைந்த இருவரும் சிகிச்சை பெற்றனர். இரவு பார்ட்டியில் ஆண் நண்பர்களுடன் கலந்து கொண்டு குடித்து விட்டு கார் ஓட்டியதால் தான் ஷர்மிளா விபத்தில் சிக்கியதாகத் தகவல் வெளியானது.

இதுபற்றி விளக்கம் அளித்து ஷர்மிளா, 'எனக்கு ஆண் நண்பர்களுடன் பார்ட்டியில் பங்கேற்கும் பழக்கம் கிடை யாது. குடிக்கும் பழக்கமும் கிடையாது. விபத்து நடந்த அன்று எனக்குக் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. கார் ஒட்டி செல்ல முடியாத நிலையில் நண்பர் ஒருவரை வரவழைத்து காரை ஒட்டச் சொல்லி மருத்துவ மனைக்குச் சென்றேன். அப்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது' என்றார்.

More News >>