கொரோனா பாதித்த நாடுகளுக்கு மருந்து சப்ளை செய்ய இந்திய அரசு அனுமதி..

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு பாரசிட்டமால், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரிகளை சப்ளை செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.கொரோனாவுக்கு தற்காப்பு மருந்தாக பயன்படக் கூடிய ஹைட்ராக்சி குளோரோகுயின் ஏற்றுமதிக்குக் கடந்த 4ம் தேதியன்று முழு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

ஏற்கனவே ஏற்றுமதி ஆர்டர் பெற்றிருந்தாலும் அதை சப்ளை செய்யவும் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், அமெரிக்காவுக்கு அந்த மருந்து, மாத்திரைகளைத் தர வேண்டுமென்று ஏற்கனவே பிரதமர் மோடியிடம் அதிபர் டிரம்ப் பேசியிருந்தார்.இந்த சூழலில், இந்தியாவின் ஏற்றுமதி தடையைக் கேள்விப்பட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், நேற்று வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் கூறுகையில், அமெரிக்காவுக்கு இந்தியா மருந்து சப்ளை செய்ய மறுத்தால் ஓ.கே.தான். ஆனால், அதற்கான அமெரிக்காவின் பதிலடி நிச்சயம் இருக்கும் என்று மிரட்டல் விடுத்தார்.

இதைத் தொடர்ந்து மத்திய அரசு ஒரு முடிவெடுத்தது. கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு அவசரத் தேவைகளுக்காக பாரசிட்டமால், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை இந்தியா வழங்கும் என்று கூறப்பட்டது. வெளியுறவுத் துறை அமைச்சகச் செயலாளர் ஸ்ரீவத்சவா இதைத் தெரிவித்தார். மேலும், அவர் கூறுகையில், இந்த விவகாரத்தை யாரும் அரசியலாக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.

More News >>