சினேகா புருஷன் ஹேப்பி.. துப்புரவாளர் நடனத்தால் மகிழ்ச்சி..

பைவ் ஸ்டார் பட நடிகர் பிரசன்னா நடிகை சினேகாவை காதலித்து மணந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஹீரோவாக நடித்து வந்த பிரசன்னா தற்போது வில்லன் வேடங்களில் நடிக்கிறார். சமீபத்தில் மாபியா படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

சில வருடங்களுக்கு முன் கண்ட நாள் முதல் என்ற படத்தில் நடித்தார் பிரசன்னா. இப்படத்தை வி.பிரியா இயக்கினார்.கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருக்கும் பிரசன்னாவுக்கு பிரியா ஒரு வீடியோ அனுப்பினார். அதில் துப்புரவாளர் ஒருவர் மேற்கே மேற்கே என்ற பாடலுக்கு நடனம் ஆடுகிறார். இப்பாடல் பிரசன்னா நடித்த கண்ட நாள் முதல் படத்தில் இடம் பெற்றதாகும். அதைக்கண்டு மகிழ்ச்சி அடைந்த பிரசன்னா அருமை என்று பாராட்டு தெரிவித்திருக்கிறார். படத்தில் இப்பாடலை ஷங்கர் மகாதேவன் பாடியிருந்தார்.

More News >>