அஜீத் படம் தயாரிக்க இரண்டு நிறுவனம் போட்டி.. அதிஷ்டம் யாருக்கு?

தல அஜீத் நடிக்கும் வலிமை படத்தை ஸ்ரீதேவி கணவர் போனிகபூர் தயாரித்து வருகிறார். ஏற்கெனவே அஜீத் நடித்த நேர் கொண்ட பார்வை படத்தைத் தயாரித்தவர் இவர். வலிமை படத்தில் தற்போது அஜீத் நடித்து வருகிறார். ஊரடங்கு காரணமாகப் படப் பிடிப்பு நடக்கவில்லை. ஊரடங்கு முடிந்தவுடன் இப்படத்தை வேகமாகப் படமாக்கி முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

இதையடுத்து அஜீத் நடிக்கும் படத்தைத் தயாரிப்பதில் போட்டி ஏற்பட்டிருக்கிறது. போனிகபூரே அடுத்த படத்தைத் தயாரிக்க கால்ஷீட் கேட்டு வருகிறார். இதற்கிடையில் விசுவாசம் படத்தைத் தயாரித்த டி.ஜி. தியாகராஜனும் அடுத்த படத்தைத் தயாரிக்க அஜீத்திடம் கால்ஷீட் கேட்டு வருகிறார். யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது என்பது விரைவில் தெரியவரும்.

More News >>