நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்சில் ஆலோசனை நடத்தினார். கொரோனாவை கட்டுப்படுத்துவது, ஊரடங்கை நீட்டிப்பது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.உலகம் முழுவதும் 209 நாடுகளில் 14 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இந்தியாவில் 5194 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. கொரோனா மேலும் பரவாமல் இருக்க வரும் 14ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று காலையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நாடாளுமன்றக் கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கை நீட்டிப்பது, ஊரடங்கால் பாதித்தவர்களின் நிலைமை, கொரோனா சிகிச்சை வசதிகள், உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.கூட்டத்தில் குலாம் நபி ஆசாத்(காங்.), சரத்பவார்(என்சிபி), டி.ஆர்.பாலு(திமுக), நவநீத கிருஷ்ணன்(அதிமுக), ராம் கோபால் யாதவ்(சமாஜ்வாடி), சுதீப்பந்தோபாத்யா(திரிணாமுல்), சஞ்சய் ரவுத்(சிவசேனா) உள்படப் பலரும் கலந்து கொண்டனர். 5 எம்.பி.க்களுக்கு அதிகமாக உள்ள கட்சிகளின் தலைவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டனர்.

More News >>