அம்பேத்கரின் முழக்கங்கள் வணிகமயமாக்கப்படுகிறதா? - காலாவிற்கு கிளம்பும் எதிர்ப்புகள்
அம்பேத்கரின் அரசியல் முழக்கம் வணிகமயமாக்கப்பட்டிருக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் பொதுச்செயலாளர் ரவிக்குமார் கூறியுள்ளார்.
நேற்று வெளியான காலா படத்தின் டீசரில், ஒன்றாகவே மாறுவாய் சீறுவாய் (Organize, make change, revolte), ”கற்றதை பற்றவை” (educate, agitate) என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளன. இது அம்பேத்கரின் முழக்கங்களில் முக்கியமானதை சுட்டிக்காட்டுவதாக அமைந்தது.
இந்நிலையில் இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் பொதுச்செயலாளர் ரவிக்குமார், ”அம்பேத்கரின் அரசியல் முழக்கம் வணிக சினிமா ஒன்றின் பிரச்சார வாசகமாக்கப்பட்டிருக்கிறது. கொடுமை!” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “ஆனால் ரஞ்சித், ரஜினிகாந்த் இருவரும் இணைந்து ஒரு மோசமான வணிக சினிமாவை அதுவும் கேங்ஸ்டர் சினிமாவை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது மிகவும் வேதனையான ஒன்று.
அதுவும் ரஜினிகாந்த் இன்னும் ஒரு சில மாதங்களில் அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ள நிலையில், இதுமாதிரியான திரைப்படங்கள் மூலம் அவருக்கு வலுவைச் சேர்ப்பது. அல்லது அம்பேத்கர் முழக்கங்களை அவருடையை திரைப்படங்களின் விளம்பரங்களுக்குப் பயன்படுத்துவது என்பது, சினிமாவால் ஈர்க்கப்பட்டிருக்கும் தலித் இளைஞர்களை ரஜினிகாந்த் கட்சிக்கான தொண்டர்களாக மாற்றுவதற்குத்தான் பயன்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.