அஜீத் பிறந்த நாளில் விஜய்யின் மாஸ்டர் ரிலீஸ்? தல-தளபதி ரசிகர்களிடையே பரபர..

சீனாவில் வந்த கொரோனா நம்மை என்ன செய்யப் போகிறது என்று கண்டு கொள்ளாமல் இருந்த இந்தியா உள்ளிட்ட எல்லா நாடுகளும் மெத்தனமாக இருந்தன. ஓரிரு மாத இடை வெளியில் எல்லா நாடுகளுக்கும் கொரோனா பரவியது. இப்போது அந்தந்த நாடுகள் தங்களுக்கு தாங்களே போட்டிப் போட்டுக்கொண்டிருக்கிறது.

ஊரடங்கு சினிமாவை ஒட்டு மொத்தமாக முடக்கிப்போட்டிருக்கிறது. ஏப்ரல் வெளியீடு என்று அறிவிக்கப்பட்ட மாஸ்டர் உள்ளிட்ட எந்த படமும் ரிலீஸ் ஆக முடியாத சூழல். மால்களில் உள்ள தியேட்டர்களுக்கு வாடகை தர வேண்டிய நிலையில் படங்கள் திரையிட அனுமதி கேட்கப்படுகிறதாம். அப்படியே அனுமதி தந்தாலும் ஒரு சீட்டுக்கு ஒரு சீட் இடைவெளி விட வேண்டும் அதாவது சோசியல் டிஸ்டன்சிங் விட வேண்டும் என்று கூறப்படும். தொற்று பரவாமலிருக்க ஒவ்வொரு ஷோவுக்கும் சானிடைசர் தெளிக்க வேண்டும். இது கூடுதல் செலவாகும்.

வெளிநாடுகளிலும் படங்கள் ரிலீஸ் ஆக வேண்டி உள்ளதால் கொரோனா பாதிப்பால் அங்குள்ள தியேட்டர்கள் நிலை பற்றித் தெரியவில்லை. தற்போதுள்ள சூழலில் ஊரடங்கு நீடிக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் ஜூன் அல்லது ஜூலையில் தான் நிலைமை ஓரளவுக்குச் சென்றடையும் அதே நேரம் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்துக்கு வெளியிட இருந்த படங்களும் பாதிக்கப்படும்.இவ்வளவு பிரச்சனைகள் இருந்தும் அஜீத் பிறந்த நாளான மே 1ம் தேதி விஜய்யின் மாஸ்டர் படம் வெளியாகும் என்று சிலர் பேசி வருகின்றனர். இதனால் தளபதி மற்றும் தல ரசிகர்களுக்கிடையே பரபரப்பு நிலவுகிறது.

மாஸ்டர் வருமா கொரோனா விடுமா?

More News >>