நடிகை தமன்னா கோபம்.. வேலை இல்லையா ?

மில்கி பியூட்டி தமன்னாவுக்கு கைவசம் படங்கள் இல்லை. இந்தியில் அவரால் வெற்றி பெற முடியவில்லை என்று அவரைப் பற்றி அவ்வப்போது செய்தி வெளியாகிறது. இதையறிந்து கோபம் அடைந்தவர் பதில் அளித்தார். அவர் கூறியது ,நான் கைவசம் படங்கள் இல்லாமல் இல்லை. 365 நாளும் நான் வேலை செய்து கொண்டுதான் இருக்கிறேன்.

தமிழ், தெலுங்கில் கவனம் செலுத்துவதால் இந்தியில் அதிக படங்களில் நடிக்க முடியவில்லை. சமீப காலமாகத் தேர்வு செய்த படங்களை ஒப்புக்கொள்கிறேன் அதனால் குறைந்த அளவு படங்களில் நடிக்கிறேன். தெலுங்கில் கோபி சந்த் உடன், 'கபடி கோச்' படத்தில் நடிக்கிறேன். இந்தியில் நவாஸுதீன் சித்திக்குமுன், 'போல் சுடியானா ' படத்தில் நடிக்கிறேன்.நடிப்பு என்பது எனது இலக்கு. அதன் மூலம் மக்களை மகிழ்விக்கிறேன். தமிழ் தெலுங்கு மொழியில் எனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறேன். பாலிவுட்டில் அந்தளவுக்குக் கவனத்தைப் பெறவில்லை. தற்போது எனக்கு மாறுபட்ட வேடங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது. அதிலும் பிடித்த வேடங்களை ஏற்று நடிக்கிறேன்.

இவ்வாறு தமன்னா கூறினார்.

More News >>