தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 738 ஆக உயர்வு.. சென்னையில் 156 பேருக்குப் பாதிப்பு

தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 738 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. நாடு முழுவதும் நேற்று வரை 5,734 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. இந்நோயால் உயிரிழந்தவர் எண்ணிக்கை 166 ஆக உயர்ந்திருக்கிறது.

மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 1135 பேருக்குப் பாதித்துள்ளது. 2வதாக, தமிழகத்தில் நேற்று வரை 738 பேருக்குப் பாதித்துள்ளது. இது குறித்து தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறியதாவது:இன்று(ஏப்.8)ஒரே நாளில் 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 42 பேருக்கு ஒரே தொற்று மூலம் பரவியிருக்கிறது. டெல்லி தப்லிகி ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் 553 பேருக்கும், அவர்கள் மூலமாக 150 பேருக்கும் கொரோனா தொற்று பரவியிருக்கிறது. சென்னையில் 156 பேர், கோவை 60, திண்டுக்கல் 46, நெல்லை 40, தேனி 39, திருச்சி 36, நாமக்கல் 33, தேனி 39, திருச்சி 36, நாமக்கல் 33, ஈரோடு 32, ராணிப்பேட்டை 29, செங்கல்பட்டு 24, மதுரை 24, கரூர் 23, திருப்பூர் 22, விழுப்புரம் 20 மற்றும் இதர மாவட்டங்களில் அதற்குக் குறைவானவர்களுக்கு கொரோனா பாதித்துள்ளது.

விமான நிலையங்களில் இது வரை 2 லட்சத்து 10,530 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 60,739 பேர், வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 1953 பேர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் உள்ளனர்.தமிழகத்தில் தற்போது 22,049 படுக்கைகள் தயாராக உள்ளன. 3,371 வென்டிலேட்டர்கள் இருப்பு உள்ளது. இது வரை 6095 சாம்பிள்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 738 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 4,893 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது. கொரோனா பாதித்தவர்களில் 21 பேர் குணமடைந்துள்ளனர்.

இவ்வாறு பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

More News >>