திரிபுரா தேர்தல் முடிவுகள் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிக்கை

திரிபுரா தேர்தல் முடிவுகள் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது : திரிபுரா மக்கள் அளித்துள்ள தீர்ப்பு அந்த மாநிலத்தில் பாஜக - ஐபிஎப்டி கூட்டணி அரசு அமைவதற்கு இட்டுச்செல்கிறது. அரசுப் பொறுப்பில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு, இடது முன்னணி ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறது.

தேர்தலில் தாக்கம் செலுத்துவதற்காக பாஜக, இதர காரணிகளுக்கு அப்பால், பெருமளவுக்குக் கொட்டப்பட்ட பணத்தையும் வேறு வழிகளையும் பயன்படுத்தியுள்ளது. பாஜக-வால் முந்தைய பிரதான எதிர்க்கட்சியாகிய காங்கிரஸ் கட்சியை நடைமுறையில் வளைத்துப்போட்டுக்கொண்டு, இடதுசாரிகளுக்கு எதிரான வாக்குகளைக் குவிக்க முடிந்திருக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடது முன்னணிக்கும் ஆதரவளித்த 45 விழுக்காடு வாக்காளர்களுக்கு அரசியல் தலைமைக்குழு நன்றி தெரிவிக்கிறது. இந்தத் தேர்தல் பின்னடைவுக்கான காரணங்களைக் கட்சி கவனமாக ஆய்வு செய்யும், சரிசெய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்களின் நலன்களுக்காக தொடர்ந்து செயல்படுவோம், பழங்குடியினர் – பழங்குடி அல்லாதார் ஒற்றுமையை உயர்திப் பிடிப்போம் என திரிபுரா மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியளிக்கிறது.

More News >>