மம்மூட்டி பட இயக்குனர் மகனுக்கு கொரோனா.. தீவிர சிகிக்சை பின் மீண்டார்..

மம்மூட்டி நடித்த படம் மாமாங்கம். தமிழ், மலையாளத்தில் இப்படம் வெளியானது. இப்படத்தை இயக்கியவர் பத்மகுமார். இவரது மகன் ஆகாஷ், நண்பர் எல்டோ மேத்யூ. இருவருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்தனர்.இது பற்றி இயக்குநர் பத்ம குமார் உருக்கமான பதிவை வெளியிட்டார்.

அதில், என் மகன் ஆகாஷ், நண்பர் மேத்யூ இருவரும் கொரோ னா தொற்றால் பாதிக்கப் பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைக்குப் பிறகு இவர் முழுமையாகக் குணம் அடைந்தனர். கொரோனா பாதிப்பிருந்தவர்களை மீட்க அயராது உழைக்கும் டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள், அமைச்சகம் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்கள் அனைவருக்கும் எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் கேரளா அரசு தனது மக்களைக் காப்பாற்றுவதில் முதலிடத்தில் செயலாற்றி வருகிறது'என தெரிவித்துள்ளார்.

More News >>