கோஹ்லிக்கு கட் அவுட்.. அனுஷ்காவுக்கு கெட் அவுட்டா.. கொதிக்கும் ரசிகர்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லியை கொண்டாடும் பாகிஸ்தான் அவரது மனைவி அனுஷ்கா சர்மா நடித்துள்ள படத்திற்கு தடை விதித்துள்ளதை ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.

ரோசிட் ராய் இயக்கத்தில் அனுஷ்கா சர்மா நடித்துள்ள படம் பரி. உலகம் முழுவதும் நேற்று வெளியான இந்த திகில் திரைப்படத்தில் அனுஷ்கா பயங்கரமாக நடித்துள்ளார். ஆனால், இந்த படத்தை வெளியிட பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு, குரான், இந்து மந்திரங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளதால் பாகிஸ்தானில் தடை விதிப்பதாகவும் பாகிஸ்தான் தணிக்கை சான்றிதழ் அமைப்பு தெரிவித்துள்ளது.

விராட் கோஹ்லி அனுஷ்கா சர்மாவின் திருமணத்திற்கு பிறகு வெளி வரும் முதல் படம் பரி. இந்தப் படத்தை விராட் ஸ்பெஷல் ஷோவில் பார்த்து ரசித்தார். மேலும், தனது மனைவி அனுஷ்காவின் நடிப்பை பாராட்டி ட்வீட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் விராட் கோஹ்லிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். ஆனால், அவரது மனைவி அனுஷ்கா நடித்துள்ள படத்திற்கு பாகிஸ்தானில் தடை விதித்திருப்பது கோஹ்லிற்கு கட் அவுட்டு.. அனுஷ்காவிற்கு கெட் அவுட்டா என்று ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

More News >>