நடிகர் பரத்தின் உண்மையான ஹீரோ.. உலகில் போராட கற்றுத் தந்தவர்..

பாய்ஸ், எம் மகன், நேபாளி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் பரத். தற்போது இந்தி படமொன்றில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் தனது தந்தையின் பிறந்த நாளை கொண்டாடினார். இது பற்றி பரத் இன்ஸ்டகிராம் பக்கத்தில் கூறியதாவது: எனக்கு எவ்வளவு வயதானாலும் சரி, என் தந்தைக்கு எவ்வளவு வயதானாலும் சரி எப்போதும் என் தந்தைக்கு நான் குழந்தை தான். எனது உண்மையான ஹீரோ என் அப்பாதான். அவர்தான் இந்த உலகில் எனக்குப் பறக்கவும், எதையும் எதிர்த்துப் போராடவும் கற்றுத் தந்தவர். அதேபோல்தான் ஒவ்வொரு பிள்ளைக்கும் அவரவர் தந்தை. என் தந்தைக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லி அவரிடம் நான் ஆசி பெற்றேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

More News >>