105 கிலோ உடல் எடையை 80 கிலோவாகக் குறைத்த கமல் பட இசை அமைப்பாளர்.. கொரோனாவால் கடுமையான உடற்பயிற்சி..

வாகை சூடவா, குட்டி புலி, நய்யாண்டி, உத்தம வில்லன், பாபநாசம் போன்ற பல படங்களுக்கு இசை அமைத்தவர் ஜிப்ரான். இவர் கொரோனா லாக்டவுனில் தனது உடல் எடையைக் குறைத்தது பற்றிக் கூறினார்.

லாக்டவுன் அறிவித்தவுடன் அந்த நாட்களில் என்ன செய்ய வேண்டும் என்பதைத் திட்டமிட்டுவிட்டேன் . ஜிம் எல்லாம் மூடப்பட்டுவிட்டதால் யூ டியூபில் பார்த்து உடற்பயிற்சிகள் செய்து 105 கிலோவாக இருந்த எனது உடல் எடையை 80 கிலோவாகக் குறைத்தேன். சிறுவயதில் படித்த ராமாயணம் மகாபாரதத்தை இப்போது மீண்டும் படித்தேன். அதில் பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது. தவிர நிறைய ஆங்கில புத்தகங்கள் படித்தேன். என் குடும்பத்தினருடன் நேரத்தைப் பகிர்ந்துகொண்டேன். ஒருவருடத்துக்கு முன்பு ஆன்லைனில் எம்பிஏ படிக்கச் சேர்த்திருந்தேன். அதற்காக நிறையப் படித்தேன். அதிகாலையில் எழுந்துகொள்ளப் பழக்கிக்கொண்டேன். இப்படி என்னைப் பல வழிகளில் பிஸியாக வைத்துக்கொண்டேன்.

இவ்வாறு ஜிப்ரான் கூறினார்.

More News >>