தளபதி மாஸ்டர் அப்டேட்: விரைவில் சந்திப்பார் கொரோனாவை வீழ்த்துவோம்..

தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் ஏப்ரல் 9ம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்தது. அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு மாஸ்டர் பட ரிலீஸையும் முடக்கிப்போட்டு விட்டது. இதனால் தளபதி ரசிகர்கள் ஏமாற்றம் அடைத்துள்ளனர்.

இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். அவருடன் கோ டைரக்டராக ஆடை இயக்குனர் ரத்னகுமார் இப்படத்தில் பணியாற்றினார். அவரும் மாஸ்டர் வெளியாகாதது குறித்து கவலை தெரிவித்திருந்தார். இந்நிலையில் இப்படத்தைத் தயாரிக்கும் சேவியர் பிரிட்டோவின் எக்ஸ் பி நிறுவனம் வெளியிட்டுள்ள மெசேஜ் ரசிகர்களுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது. ஊரடங்கை நாம் வீழ்த்த முடியாது. ஆனால் நம்முடைய ஆன்மாக்களின் பிரார்த்தனையின் சக்தி கொரோனாவை விரட்டும்.விரைவில் மாஸ்டர் உங்களைச் சந்திக்க வருவார் எனத் தெரிவித்துள்ளனர்.

More News >>