ஷூக்களுக்கு பாலிஷ் போட்ட டெர்மினேட்டர் ஹீரோ.. அமெரிக்காவில் தாண்டவம் ஆடும் கொரோனா..

டெர்மினேட்ட்டர் உள்ளிட்ட பல்வேறு ஹாலிவுட் படங்களில் நடித்திருப்பவர் அர்னால்ட் ஸ்கவர்சினேக்கர். அமெரிக்காவில் கொரோனா தொற்று தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. லட்சக் கணக்கானவர்கள் கொரோனாவால் பதிக்கப்பட்டிருக்கின்றனர். இறப்பு சதவீதமும் அதிகரித்திருப்பதால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒரு சில ஹாலிவுட் நடிகர்கள் கொரோனாவால் இறந்தும் உள்ளனர்.

வீட்டிலேயே இருக்கும் அர்னால்டு நேரத்தை வெட்டியாகச் செலவழிக்காமல் தனது உடைகளைத் தானே சலவை செய்துகொள்கிறார். அத்துடன் விதவித தனது ஷூக்களுக்கும் பாலிஷ் போடுகிறார். அவரது மகளும் அவருக்கு உதவியாக இருக்கிறார். வீட்டின் முற்றத்தில் அமர்ந்து ஷூக்கு பாலிஷ் போடும் வீடியோவை வெளியிட்டிருப்பதுடன் கொரோனா பரவாமல் தனிமைப்படுத்திக்கொள்வது பற்றியும் அறிவுரை வழங்கியிருக்கிறார்.

More News >>