நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய்.. தமிழக அரசு அறிவிப்பு..

தென்னிந்திய நடிகர் சங்க தனி அலுவலர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு தமிழ்நாடு திரைப்பட நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு ஆயிரம் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்த அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

அதன் அடிப்படையில் நடிகர் சங்க உறுப்பினர்கள் (திரைப்பட நல வாரியத்தின் உறுப்பினர்கள் மட்டும்) கீழ்க்காணும் ஆவணங்களை 10 மற்றும் 11.4.2020 ஆகிய இரு தினங்களுக்குள் nsct2015@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், மின்னஞ்சலில் அனுப்ப இயலாதவர்கள் 98656 03660 , 98417 65110 ஆகிய அலைபேசி வாட்ஸ் ஆப் எண்ணிற்குப் போட்டோ, நகல் எடுத்து அனுப்புமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.தேவையான ஆவணங்கள்: 1.திரைப்பட நல வாரிய புத்தகத்தின் முதல் பக்கம்2.வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் (அல்லது) காசோலை3.நடிகர் சங்க உறுப்பினர் அடையாள அட்டை.

இவ்வாறு தனி அதிகாரி தெரிவித்துள்ளார்.

More News >>