கொரோனாவிலிருந்து மீண்ட ஹாலிவுட் படத் தயாரிப்பாளர் சிறையில் அடைப்பு..

நடிகை உள்பட 80 பெண்களுக்கு பாலியல் தொல்லை தந்தவர் ஹாலிவுட் படத் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ் டின். இவர் பாலியல் தொல்லை தந்ததாக ஹாலிவுட் நடிகைகள் ஏஞ்சலினா ஜோலி உள்பட 80 பெண்கள் பாலியல் புகார் கூறினார். இது தொடர்பாக அமெரிக்க நியூயார்க் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் ஹார்விக்கு 23 வருடம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் ஹார்வி வெயின்ஸ்டின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். சிறையிருந்து தனிமைப்படுத்தப்பட்ட அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் குணம் அடைந்தார். இதையடுத்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். ஹார்வி சிறையில் மனநலப் பிரிவில் வைக்கப்பட்டிருக்கிறார். அவர் தற்கொலை எண்ணத்திற்கு மாறாதபடி கண்காணிக்கப்படுகிறார் எனச் சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

More News >>