எந்திரனில் சூப்பர் ஸ்டாருக்கு டூப்போட்ட நடிகர்.. போட்டோ வெளியிட்டு மகிழ்ச்சி..

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்த சைன்ஸ் பிக்‌ஷன் கதை எந்திரன். ரோபோவை மையமாக வைத்து படமாக்கப்பட்டது. இதில் ரஜினி இரட்டை வேடத்தில் நடித்தார். இரு கதாபாத்திரமும் ஒரே நேரத்தில் காட்சியில் வரும்போது ரஜினிக்கு டூப் தேவைப்பட்டது. அதில் ரஜினிக்கு டூப்பாக நடித்தது யார் என்ற விவரம் இதுவரை சஸ்பென்ஸாக இருந்தது. தற்போது அந்த நடிகர் யார் என்பது தெரியவந்திருக்கிறது.

தாஜ்மகால் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவரும், பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் மகனுமான மனோஜ்தான் ரஜினிக்கு டூப்போட்டு நடித்திருக்கிறார். தனது இணையதள பக்கத்தில் ரஜினியுடன் அவர் நடித்திருக்கும் காட்சிகளை நெட்டில் வெளியிட்டிருக்கிறார். சிட்டி ரோபோ கார் ஓட்டும்போது அருகில் அமர்ந்திருப்பது, ஐஸ்வர்யாராயுடன் ரோபோ ரஜினியும், வசிகரன் ரஜினியும் பேசும் காட்சிகளில் மனோஜ் நடித்திருக்கும் காட்சி புகைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன.

More News >>