தாடி பாலாஜியை உருக வைத்த கொரோனா.. குடும்பத்தை நினைத்துப் புலம்பல்..
நடிகர்கள் வடிவேலு, விவேக்குடன் நிறையப் படங்களில் காமெடி வேடத்தில் நடித்திருப்பவர் தாடி பாலாஜி. விஜய் டிவியிலும் தொகுப்பாளராக, நடுவராக இருக்கிறார். இவரது மனைவி நித்யா. போஷிகா என்ற மகளும் இருக்கிறார். மனைவிக்கும் பாலாஜிக்கும் எப்போதும் சண்டைதான். இதைப் பகிரங்கமாகவே அவர்கள் வெளிப்படுத்தி இருக்கின்றனர். கமல் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருவரும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் இருவரும் சமாதானம் ஆகி இணைவதுபோல் காட்டப்பட்டது. ஆனாலும் அதன் பிறகு இருவரும் தனித்தனியாக வசிக்கின்றனர்.
கொரோனா ஊரடங்கு பாலாஜிக்கு ஒரு பாடத்தை கற்றுத் தந்திருக்கிறது. இதுபற்றி அவர் கூறும் போது,”பிக்பாஸ் வீட்டில் செல்போன், டிவி ஏதும் கிடையாது. ஆனால் கூட நிறையப் பேர் இருந்தார்கள். வீட்டில் இருக்கும் இந்த சமயத்தில் செல்போன், டிவி இருக்கிறது. குடும்பம் என்ற ஒன்று இல்லாததால் பொழுதுபோகவில்லை எனப் புலம்பித்தள்ளியிருக்கிறார்.