சிம்ரன் பாடலுக்கு நடிகையின் டிக் டாக் வீடியோ..

90களின் கனவு கன்னி சிம்ரன். கமல், விஜய், அஜீத் என எல்லா முன்னணி நடிகர்களுடனும் நடித்துவிட்டார். ரஜினியுடன் நடிக்கவில்லையே என்ற வருத்தம் இருந்தது. அந்த வருத்தமும் பேட்ட படத்தில் நடித்ததன் மூலம் தீர்ந்தது. சில மாதங்களுக்கு முன் சிம்ரன் டிக் டாக் செயலியில் இணைந்து அஜீத், விஜய் உள்ளிட்ட நடிகர்களின் பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் சிம்ரனின் தொட்டுத் தொட்டு பேசும் சுல்தானா பாடலுக்கு நடிகை ஒருவர் நடனம் ஆடி டிக்டாக் வீடியோ வெளியிட்டுள்ளார். டிவியில் ராஜா ராணி சீரியலில் நடித்தவர் ஆலியா மானஸா. இவர் அதே சீரியலில் நடித்த சஞ்சீவை காதலித்து மணந்தார். சமீபத்தில் இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. தற்போது பழைய உடற்கட்டுக்கு வந்திருக்கும் மானஸா நடிகை சிம்ரனின் பாடலுக்கு நடனம் ஆடி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார். அதில் எப்போதும் என்னுடைய பேவரட் பாடல் இது.. உங்க பேவரட் என்ன என்று ரசிகர்களை கேட்டிருக்கிறார்.

More News >>