அமெரிக்காவில் வீட்டுக்குள்ளேயே தவிக்கும் நடிகை..

லண்டன், தகதிமிதா போன்ற ஒரு சில படங்களில் நடித்திருப்பவர் அங்கிதா. திருமணத்துக்கு பிறகு அமெரிக்காவில் செட்டிலானார். அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு பற்றி அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் கொரோனா தொற்று அதிகம் பரவி இருப்பதால் எல்லா மருத்துவமனைகளும் நிரம்பி விட்டன. அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூட வெளியில் செல்ல முடியவில்லை. மருத்துவமனைகளில் கேன்சர் நோயாளிகள் கூட கவனிக்கப்படுவதில்லை. கொரோனா பாத்தித்தவர்களுக்கு தான் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நான் வீட்டிலேயே அடைந்து கிடக்கிறேன். வெளியில் செல்ல முடியவில்லை எல்லோரும் வீட்டிலேயே பத்திரமாக இருங்கள் என தெரிவித்திருக்கிறார்.

More News >>