சூப்பர் ஸ்டாருக்கு கதை எழுதுகிறார் லோகேஷ்.. தளபதியின், மாஸ்டர்: ரிலீசுக்கு ரெடி..

தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தை முடித்து விட்டார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். கொரோனா ஊரடங்கிற்கு பிறகு இப்படம் திரைக்கு வருகிறது.மாஸ்டர் படத்தை முடித்த கையோடு சூப்பர் ஸ்டார் நடிக்கும் புதிய படத்துக்கு ஸ்க்ரிப்ட் எழுதத் தொடங்கி இருக்கிறார் லோகேஷ் . இப்படத்தைக் கமல் தயாரிக்க உள்ளார். ஆகஸ்ட் மாதமே இதனைத் தொடங்க திட்டமிட்டிருந்தார் கமல். கொரோனா ஊரடங்கு எல்லாவற்றையும் புரட்டிப் போட்டுவிட்டது.ஸ்கிரிப்ட் ரெடியானவுடன் ரஜினியைச் சந்தித்துக் கதை சொல்கிறார் லோகேஷ் கனகராஜ். தற்போதைக்கு போடப்பட்டிருக்கும் இந்த திட்டத்தில் என்னென்ன மாற்றம் வரும் என்பது ரஜினி எப்போதும் செய்வதுபோல், எல்லாம் காலத்தின் கையில்தான் உள்ளது.

More News >>