டிக் டாக்கில் மலையன் படப் பாடல் ட்ரெண்டிங்.. கொரோனா சோகத்தில் லக லக..

கடந்த 2009ம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி, நடிகர் கரண், ஷம்மு, உதயத்தாரா, சக்திக்குமார், கஞ்சா கருப்பு, சரத்பாபு ஆகியோர் நடித்த படம் மலையன். த்ரிஷம் புரொடக்ஷன் ஆர்.பால சுப்ரமணியன், பி.கே. ரகுராம் இப்படத்தைத் தயாரித்திருந்தனர். இணைத் தயாரிப்பு தீரஜ்கேர். படத்தின் இயக்குனர் எம் பி. கோபி. இப்படத்தின் கதை சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் வேலை பார்க்கும் ஒரு தொழிலாளி பற்றியது, தமிழக அரசின் மூன்று விருதுகளை இப்படம் பெற்றது.

சிறந்த நடிகர் கரண் , சிறந்த குணச்சித்திர நடிகர் சரத்பாபு, சிறந்த நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு ஆகியோர் விருதுகளைப் பெற்றனர். மலையன் படம் வெளிவந்து 11 வருடங்கள் ஆகின்றன. இப்படத்திற்காகத் தீனா இசையில் , சினேகன் எழுதிய "பொத்தி வெச்ச ஆசை எல்லாம் பத்திரமா இருக்கிறது ஐயா" என்ற பாடல் தற்போது டிக் டாக்கில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதற்குக் காரணம் ட்ரெண்டிங் காரணம் என்னவென்றால் கொரோனா பாதிப்பில் நாடு திரும்ப முடியாமல் வெளிநாட்டில் இருக்கும் தன்னுடைய கணவனை நினைத்து உருகி தாலியைக் கையில் பிடித்தபடியும், வெளிநாட்டில் இருக்கும் காதலனை நினைத்தும், நிச்சயதார்த்தம் முடிந்த பெண்கள் தன்னுடைய வருங்கால கணவனை நினைத்து உருகியும் டிக்டாக் செய்கிறார்கள்.

இது பார்ப்பவர் மனதை நெகிழ வைக்கிறது. 11 வருடங்கள் ஆனாலும் இந்தப்பாடல் நவீன டிக் டாக் காலத்திலும் ட்ரெண்டிங் ஆகி வருவதை எண்ணிப் படக்குழு மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

More News >>