விஷ்ணு விஷால் நடிக்கும் மோகன்தாஸ்..

இன்று நேற்று நாளை, முண்டாசுப்பட்டி, ராட்ஷசன் என வரிசையாக வெற்றிப் படங்களில் நடித்தார் விஷ்ணு விஷால். இதையடுத்து அடுத்தடுத்த படங்கள் தேர்விலும் கவனமாக இருக்கிறார். தற்போது மனு ஆனந்த் இயக்கத்தில் எப் ஐ ஆர் படத்தில் நடித்து வருகிறார்.அடுத்த படம்பற்றிய அறிவிப்பு வெளியிடுவது பற்றி யோசித்து வந்த விஷ்ணு விஷால்.இதுபற்றி தனது ரசிகர்களிடம் கருத்துக் கேட்டார்.

கொரோனா வைரஸ் ஊரடங்கு நடக்கும் நிலையில் புதிய படம் அறிவிக்கலாமா என்று ரசிகர்களிடம் கேட்க அதற்கு ரசிகர்கள் ஓகே சொன்னார்கள். இதையடுத்து புதிய படத்தை அறிவித்தார். புதிய படத்துக்கு மோகன் தாஸ் என டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது . இப்படத்தை டிஜிட்டல் தளத்தில் களவு படத்தை இயக்கிய முரளி கார்த்திக் இயக்குகிறார். விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. கே எஸ். சுந்தரமூர்த்தி இசை அமைக்கிறார். விக்னேஷ் ராஜகோபாலன் தயாரிக்கிறார்.

More News >>