ராஷ்மிகாவுக்கு பிராக்கெட் போடும் இளம் நடிகர்... ரசிகர்கள் கலாய்..

பியார் பிரேம் காதல், தாராள பிரபு, தனுசு ராசி நேயர்களே போன்ற படங்களில் நடித்திருப்பவர் ஹரிஷ் கல்யாண். கமல் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரைசைவுடன் நெருக்கமாகப் பழகினார். பின்னர் பியார் பிரேம் காதல் படத்தில் இணைந்து நடித்தனர். இவர்களின் நெருக்கத்தால் இருவரும் காதலிப்பதாகத் தகவல் வெளியானது. ரைஸாவும் ஹரிஸுடன் டேட்டிங் போக ஆசை என்று ஒருமுறை குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதுபற்றி ஹரிஷ் எதுவும் சொல்லவில்லை.

இந்நிலையில் ஹரிஷ் புது குண்டு தூக்கிப்போட்டிருக்கிறார். விஜய் தேவர் கொண்டாவுடன் டியர் காம்ரேட் போன்ற படங்களில் நடித்திருப்பவர் ராஷ்மிகா மன்தன்னா. இவர் மீது தனக்கு கிரஷ் அதாவது ஈர்ப்பு இருப்பதாக ஹரிஷ் தெரிவித்திருக்கிறார். இதைக்கண்ட நெட்டிசன்கள்.' என்ன காதல் மன்னா ரைசா என்னவானார். காத்து ராஷ்மிகா பக்கம் வீசுது' என்று ஹரிஷை கலாய்த்திருக்கினறனர்.ராஷ்மிகா தற்போது சுல்தான் என்ற படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கிறார்.

More News >>