ldquoவிஸ்வரூபம் 2rdquo டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகர் கமல்ஹாசன் நடித்து வெளியாக இருக்கும் விஸ்வரூபம் 2 படத்தின் டிரைலர் ரிலீசாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து பல்வேறு தடைகளை தாண்டி ரிலீசான படம் விஸ்வரூபம். இந்தப் படம் சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்ததை அடுத்து, விஸ்வரூபம் 2 எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதன் படப்பிடிப்புகள் முடிந்த நிலையிலும் பல்வேறு பிரச்னைகளால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், விஸ்வரூபம் 2 விரைவில் திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது. பின்னர், காலாவிற்கு போட்டியாக ஏப்ரல் 27ம் தேதி அன்றே விஸ்வரூபம் 2 படம் ரிலீசாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், விஸ்வரூபம் 2 படத்தின் டிரைலர் வரும் ஏப்ரல் மாதம் 13ம் தேதி ரிலீஸ் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஸ்வரூபம் 2 படத்தை இயக்கி, தயாரித்து, நடித்துள்ள கமல்ஹாசனுடன், ராகுல் போஸ், பூஜாகுமார், ஆண்ட்ரியா, சேகர் கபூர் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.