தனியாக கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய நடிகை..

நடிகை ரைசா வில்சன். ஹரிஷ் கல்யாண் ஜோடியாக பியார் பிரேம் காதல் படத்தில் நடித்தவர் இவர் கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கிறார். இந்நிலையில் இவரது பிறந்தநாள் வந்தது. அவருக்கு நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் டிவிட்டரில் வாழ்த்துக் கூறினார்கள்.

வாழ்த்துகளைக் கண்டு மகிழ்ந்த ரைசா தனது வீட்டில் தனியாக அமர்ந்து வாழ்த்து சொன்னவர்களுக்கு நன்றி கூறியபடி கேக் வெட்டி அதில் ஒரு துண்டை எடுத்து எல்லோருக்கும் பகிர்வதாகத் தெரிவித்தார். அதனை வீடியோவாகவும் வெளியிட்டார்.

More News >>