கொரோனா சிகிச்சைக்கு மண்டபம், ஓட்டல்கள்.. கோலிவுட் ஸ்டார்கள் தாராளம்..

கொரோனா வைரஸ் ஒருபக்கம் மக்களையும், அரசாங்கங்களையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்க அதை எதிர்த்து அரசும் டாக்டர்களும் சுகாதார பணியாளர்களும் போராடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்குப் பிரபலங்கள் நிதியுதவி செய்து தோள் கொடுக்கின்றனர். அது தவிர இட உதவிக்கும் கைகொடுத்திருக்கின்றனர்.கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களைத் தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்க போதுமான இட வசதி குறைபாடு காரணமாக பலர் தங்களது தாராளத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா மண்டபத்தை தனிமைப்படுத்தல் சிகிச்சை மையமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அரசுக்குத் தெரிவித்திருக்கிறார்.ஊரடங்கு அறிவிக்கப்பட்டவுடனேயே மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது கட்சி அலுவலகத்தைச் சிகிச்சை மையமாக அரசு பயன்படுத்தலாம் என்றதுடன் அரசு அனுமதித்தால் தனது கட்சியில் உள்ள டாக்டர்களை கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கவும் பயன்படுத்தலாம் என்றார்.

தேசிய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் விஜயகாந்த் கோயம்பேட்டில் உள்ள தனது கட்சி அலுவலகத்தைத் தனிமை சிகிச்சை மையமாக பயன்படுத்தலாம் என்று அறிவித்தார். அதேபோல் கவிஞர் வைர முத்து கோடம்பாக்கத்தில் உள்ள தனது பொன்மணி வைரமுத்து மண்டபத்தை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சைக்குப் பயன்படுத்தலாம் எனத் தெரிவித்தார்.இந்தி நடிகர் ஷாருக்கான். தேவி பட வில்லன் சோனு சூட் ஆகியோர் தங்களது அலுவலகம், ஓட்டலை இடங்களைத் தருவதாக அறிவித்தனர்.

More News >>