திருமணத்துக்கு முன்பே தந்தையாகும் நடிகர்.. கேர்ள் பிரண்ட் கர்ப்பம்..

ஹாரி பாட்டர் என்ற மாயா ஜாலம் நிரம்பிய ஹாலிவுட் படம் தொடர்ச்சியாக வெளிவந்தது. இதில் ரோன் வெய்ஸிலே கதாபாத்திரத்தில் நடித்தவர் ரூபர்ட் க்ரின்ட். தற்போது 31வயதாகிறது. இவரது கேர்ள் பிரண்ட் ஜார்ஜியா குரூம். இருவரும் திருமணம் செய்துக் கொணடார்களா என்பது தெரியவில்லை ஆனால் ஜார்ஜியா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இதை இவர்கள் இருவரது சார்பில் பிரதிநிதிகள் தெரிவித்தனர். விரைவில் ஜார்ஜியா தாய் ஆக உள்ளார்.

ரூபர்ட்டை பொறுத்தவரைத் தனது வாழ்க்கை பற்றி அதிகம் வெளியுலகத்திற்குப் பகிர்வதில்லை. யாருடனும் தொடர்பில் இருக்கக் கூடாது என்பதால் இணைய தளத்தில் கூட அவர் எந்த கணக்கும் வைத்திருக்கவில்லை.

More News >>