சூர்யாவின், சூரரைப்போற்று மேக்கிங் வீடியோ.. ரசிகர்களுக்கு நாளை விருந்து..

சூர்யா நடித்திருக்கும் படம் சூரரைப்போற்று. மாறன் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருக்கும் இப்படம் ஏர்டெக்கான் அதிபர் ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறையில் படம் திரைக்கு வருவதாக இருந்தது. கொரொனா ஊரடங்கு காரணமாகப் பட ரிலீஸ் தள்ளிப்போகிறது. ரசிகர்கள் ஏமாற்றத்தைப் போக்கும் வகையில் இப்படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிடுகின்றனர். தமிழ்ப்புத்தாண்டு தினமான நாளை காலை 9 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகிறது. இப்படத்தில் அபர்ணா பாலமுரளி ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் ஊர்வசி, கருணாஸ். ஜாக்கி ஷெராப், மோகன்பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தைச் சுதா கொங்கொரா இயக்கி இருக்கிறார். இவர் மாதவன், ரித்திகா சிங் நடித்த இறுதிச்சுற்று படத்தை இயக்கியவர்.

More News >>