தல அஜீத், வலிமை பொங்கலுக்குத் தள்ளுகிறது..

தல அஜீத் நடிக்கும் வலிமை படத்தை போனிகபூர் தயாரிக்கிறார். எச். வினோத் டைரக்ட் செய்கிறார். இப்படத்தைத் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். எல்லாவற்றையும் கொரோனா திருப்பி போட்டதுபோல் வலிமை படத்தின் ரிலீஸ் திட்டத்தையும் திருப்பி போட்டிருக்கிறது. ஊரடங்கால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.14ம் தேதி ஊரடங்கு முடிந்ததும் படப்பிடிப்பைத் தொடங்க எண்ணிய நிலையில் மீண்டும் ஊரடங்கு தொடரும் என்ற தகவல் படக்குழுவை மறுபடியும் முடக்கி போட்டிருக்கிறது. இதனால் படப் பிடிப்பை மறுபடியும் தள்ளிப் போட வேண்டியிருக்கிறது. வெளிநாட்டுப் படப்பிடிப்பும் தள்ளிப்போகிறது. இந்நிலையில் வலிமை தீபாவளி ரிலீஸ் ஆவதற்குப் பதில் ஜனவரி மாதம் பொங்கலுக்கு தள்ளிப்போகும் என்று தெரிகிறது.

More News >>